‘விஜயசாந்திபோல் புகழ்பெறுவேன்’

'கங்காரு', 'வந்தாமல', 'சாரல்', கதிரவனின் 'கோடைமழை' போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீ பிரியங்கா. தற்போது 'மிகமிக அவசரம்' என்ற படத்தில் போலிஸ் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ பிரியங்கா நானும் விஜயசாந்தி போல் புகழ்பெறுவேன் என்று கூறியுள்ளார். 'கங்காரு' படத்தைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி இயக்கும் இந்தப் படத்தில் நாயகனாக கோரிப்பாளையம் ஹரீஸ் நடிக்கிறார். "நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலுமே ஒவ்வொரு மாதிரியான கதாபாத்திரம் அமையவேண்டும் என்பதுதான் எனது ஆசையாக உள்ளது. அதனால்தான் கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறேன். அவ்வகையில் 'சாரல்' படத்திற்கு பிறகு நான் நடித்து வரும் 'மிகமிக அவசரம்' படத்தில் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறேன். ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது, 'வைஜெயந்தி ஐபிஎஸ்' படத்தில் விஜயசாந்தி நடித்த வேடம்தான் என் மனதில் ஓடியது. அந்த அளவுக்கு ஒரு கம்பீரமான வேடம். சமூக நோக்கமுள்ள இந்தக் கதையில் கெத்தான காவல்துறை அதிகாரியாக தற்போது நடித்துக் கொண்டிருக்கிறேன்.

"அதனால், இந்தப் படம் என்னை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும். அதோடு, இதன் பிறகு விஜயசேதுபதி உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்காகப் பேசிக்கொண்டிருக் கிறேன். அந்த வாய்ப்புகள் விரை வில் கைகூடும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் வெகு விரைவில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை பட்டியலில் நானும் இணைந்துவிடுவேன்," என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஸ்ரீ பிரியங்கா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!