தொழில் பக்தியுள்ள ரெஜினாவுக்குப் பாராட்டு

ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்தாலும் கா‌ல்‌ஷீட் வி‌ஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறாராம் ரெஜினா. அதற்கும் மேலாக நேரம் தவறாமையைக் கடைப்பிடிக்கிறாராம். காலை 9 மணிக்குப் படப்பிடிப்பு என்றல் 8.30 மணிக்கு படப்பிடிப்புத் தளத் துக்குச் சென்று மேக்கப் போட்டு தயாராகி விடுகிறாராம். அதோடு படப்பிடிப்புத் தளத்தில் தேவையில்லாத வெட்டி அரட்டையும் அடிப்பது இல்லையாம். இதனால் ரெஜினாவை தொழில் பக்தியுள்ள நடிகை என்று இயக்குநர்கள் புகழ்ந்து பேசுகின்றனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடித்தபோதே தமிழில் பரபரப்பாக வேண்டிய ரெஜினா, அந்த நேரத்தில் தன்னிடம் கதை சொன்ன இயக்குநர் களிடம் கவர்ச்சி விசயத்தில் கறாராகப் பேசியதால் அனைவருமே பின்வாங்கி விட்டனர். இதனால் தெலுங்கு சினிமாவில் கவனத்தைத் திருப்பிய ரெஜினா, அங்கு ஒருசில படங்களில் குடும்பப் பாத்திரத்தில் நடித்தார். ஆனால் பின் னர் அவரையும் அங்குள்ள இயக்கு நர்கள் கவர்ச்சி காட்ட வைத்துவிட்டனர். இதனால் அங்கு இன்னும் நீடித்தால் தன்னை முழுநேர கவர்ச்சி நாயகியாக ஆக்கிவிடுவார்கள் என எண்ணியவர் மீண்டும் தமிழுக்கே திரும்பி வந்து 'நெஞ்சம் மறப்பதில்லை', 'சரவணன் இருக்க பயமேன்', 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்', 'ராஜதந்திரம் 2' எனப் பல படங்களில் ஒப்பந்தமாகி பரபரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் சில படங்களில் இரு நாயகிகளில் ஒருவராகவும் நடித்து வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!