ஜெயலலிதாவுக்கு திரையுலகினரின் இரங்கல்

ரஜினிகாந்த்: இந்திய நாடே தன்னுடைய வீரப் புதல்வியை இழந்து தவிக்கிறது.

அஜித்: அம்மா அவர்களின் மறைவால் வாடும் என் தமிழ் நாட்டு மக்களுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர் களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பல்வேறு இன்னல்களைக் கடந்து சாதனைப் புரிந்தவர். அவர் மீண்டு வருவார் என்ற பிரார்த்தனைகளுக்கிடையில் அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி பேரதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. அவரது பிரிவால் வாடும் எனக்கும், எண்ணற்ற தமிழ் மக்களுக்கும் இந்தப் பிரிவை தாங்கும் வல்லமையை இறைவன் தரவேண்டும்.

கமல்ஹாசன்: வெளிநாட்டில் இருக்கின்றேன். என்னால் நேரில் வந்து அஞ்சலி செலுத்தமுடியவில்லை. அவரை இழந்து தவிக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

வைரமுத்து: மறைந்தும் மறையாத கலையரசிக்கு ஒரு ரசிகனாக எனது அஞ்சலிப் பூக்களை அள்ளித் தெளிக்கிறேன். எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாருக்கு ஆறுதல் சொல்வது?

வடிவேலு: ஜெயலலிதா சாகவில்லை. சாகவில்லை. சாகவில்லை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்தத் தாய் இறந்தது எனக்கு மிகுந்த துயரமாக இருக்கிறது. அவரின் ஆன்மா இறைவனின் காலடியில் சேர வேண்டுகிறேன்.

திரையுலகில் சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்த ஜெயலலிதாவிற்கு ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை வைஜெயந்தி மாலா ஏதோ சொல்ல அதைக் கேட்டு நாணத்துடன் சிரிக்கிறார் ஜெயலலிதா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!