கதாநாயகர்களுக்கு ஒரு நியாயம், நாயகிகளுக்கு ஒரு நியாயமா? என்று 'பாலிவுட்' நடிகை பிரியங்கா சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நாயகிகளான பிரியங்கா சோப்ராவும் தீபிகா படுகோனும் 'ஹாலிவுட்' சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் 'பாலிவுட்'டில் அடிக்கடி ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. இது குறித்துப் பிரியங்கா சோப்ரா கூறுகையில், "ஒரு நடிகையோடு மற்றொரு நடிகையை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். ஆனால் யாரும் நடிகர்களை ஒப்பிட்டுப் பேசுவது இல்லை. "நடிகர்கள் மட்டும் எப்போதும் ஒற்றுமையாக இருப்பதுபோலவும் நடிகைகள் என்றால் எப்போதும் சண்டை போடுவது போலவும் பேசுகிறார்கள்.
இது என்ன நியாயம்? "நானும், தீபிகாவும் வித்தியாச மானவர்கள். எங்களின் விருப்பங் கள் வெவ்வேறாக உள்ளன. நாங்கள் எங்களுக்குப் பிடித்த வற்றை செய்கிறோம். நடிப்பு என்று வரும்போது இரு நடிகைகளுக்கு இடையே போட்டி இருக்கத்தான் செய்யும். அதற்காக இரு நடிகைகளுக்கும் ஆகாது, எப்போதும் அவர்களுக்குள் சண்டை என்று எல்லாம் பேசுவது நியாயம் இல்லை. "ஒரு நடிகையின் காலை வாரி விட மற்றொரு நடிகை விரும்புவதாக நினைக்கி றார்கள். வேலை என்று வந்தால் போட்டி இருக்கத் தான் செய்யும். அது நடிகைகளாக இருந்தாலும் நடிகர்களாக இருந்தாலும் ஒன்று தான். இந்த விஷயத்தில் நடிகைகளை மட்டும் குறைகூறி பேசு கிறார்கள். இது கண்டிக்க வேண்டிய செயல்," என்று ஆவேசமாகப் பேசினார் பிரியங்கா சோப்ரா.