சூர்யா இடத்தை நிரப்பும் விஷால் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள

'சிங்கம் 3' படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை வருகிற கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். தற்பொழுது படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் கிடைத்துள்ளதால் அதற்கு 'யு' சான்றிதழ் வாங்குவதற்காக போராடுவது ஒரு பக்கம், இப்படத்தின் காட்சிகளுக்கு அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்யக் கூடாது என்று படத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருப்பது மற்றொரு பக்கம். இதுபோன்ற காரணங்களால் இப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 'சி 3' தள்ளிப்போனதால் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'கத்திச்சண்டை' படத்தை டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்போகிறார்கள். இப்படம் ஏற்கெனவே பொங்கல் தினத்தையொட்டி ஜனவரியில் வெளி யாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே களத்தில் இறங்கி இருக்கிறார் விஷால்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!