சிங்கத்தை சாய்த்த ‘ஸ்வீட்டி’

ஹரி இயக்கத்தில் வெளியான 'சிங்கம்' படம் மூலம் முதன்முதலாக சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார் அனுஷ்கா. அதன்பிறகு சூர்யாவுடன் சேர்ந்து 'சிங்கம் 2' படத்திலும் தற்பொழுது 'எஸ் 3'யிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் அனுஷ்கா பற்றி சூர்யா கூறுகையில், "அனுஷ்கா உண்மையான வாழ்க்கையில் ஒரு 'ஸ்வீட்டிதான்'. (அனுஷ்கா வின் உண்மையான பெயர் 'ஸ்வீட்டி') அவரை நான் முதன்முதலாக சந்தித்தபோது இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 'சிங்கம்' படப்பிடிப்பு துவங்கிய தினம் எனக்குத் திருமண நாள். அனுஷ்காவை அன்றுதான் முதன் முதலாகப் பார்த்தேன்.

அவர் ஜோதிகாவையும் என்னுடைய புகைப்படங்களையும் ஒரு பெரிய அட்டையில் ஒட்டிப் படக்குழுவினரிடம் கையெழுத்து வாங்கி அதை என்னிடம் கொடுத்து வாழ்த்து கூறினார். 'சிங்கம் 3' படப்பிடிப்பின்போது ஓட்டுநர் ஒருவர் தனது குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதை அறிந்த அனுஷ்கா, அவருக்கு கார் ஒன்றைப் பரிசாக அளித்தார். அவருடன் இணைந்து நடிப்பது எனக்குப் பெருமையாக இ ரு க் கி ற து , " என்றார் சூர்யா. இரண்டு காரியங்களைச் செய்து சிங்கத்தை சாய்த்துவிட்டார் 'ஸ்வீட்டி'.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!