விஷால் ஜோடியாக நடிக்கும் கீர்த்தி

விஷாலுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'பைரவா' வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் விஜய், சூர்யாவைத் தொடர்ந்து 'சண்டக்கோழி 2' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி ஒப்பந்தமாகி உள்ளார். பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தற்போது தொடக்கப் பணிகளில் இயக்குநர் லிங்குசாமி கவனம் செலுத்தி வருகிறார். முதல் பாகத்தில் விஷாலின் தந்தையாக நடித்த ராஜ்கிரண் இப்படத்திலும் அதே பாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் சத்யராஜிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!