வடிவேலு: ரஜினி படத்தில் கூட நடிக்க மறுத்துவிட்டேன்

'கத்திசண்டை' பட வெளியீட்டை வடி வேலுவைவிட, ரசிகர்கள் வெகுவாக ஆவலாக எதிர்பார்த்து இருக்கிறார்கள். காரணம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள படம். கடந்த சில ஆண்டுகளாகவே எந்த விஷயம் குறித்தும் பேசாமல் மவுனம் காத்து வந்த அவர், இப்போது பல வற்றை வெளிப்படையாகக் கூறி வருகிறார். அந்த வகையில், ரஜினியின் 'லிங்கா' படத்திலிருந்து தான் விலகி யது ஏன் என்பதற்கு வடிவேலு விளக்கம் அளித்துள்ளார். ரஜினி நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வெளிவந்த 'லிங்கா' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வடி வேலுவை அணுகியதாகக் கூறப்பட் டது. பின், அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. வடிவேலு அப்போதைக்கு நடிப்பில் இருந்து விலகி இருந்ததாலும் கதா நாயகனாக மட்டுமே நடிக்க முடிவெ டுத்துள்ளதாகவும் அதனால்தான் அந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் நகைச்சுவை வேடத்தில் 'கத்தி சண்டை' படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார் வடிவேலு. "முன்பு 'லிங்கா' படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகளில் மட் டுமே வரும் என்று இயக்குநர் கூறி னார். இதுபோன்ற சிறிய வேடத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. "படம் முழுவதும் வரக்கூடிய வேடங்களில் நடிப்பதையே எனது ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதனால் தான் ரஜினி படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. தற்போது 'கத்தி சண்டை' படத்தில் என்னுடைய கதா பாத்திரம் ரொம்பவும் அழகாக வந்துள்ளது. அதனால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். "அதிலும் படத்தின் நாயகன் விஷால் தனிப்பட்ட முறையில் எனக்கு அழைப்பு விடுத்தார். இயக்குநர் சுராஜும் எனது நல்ல நண்பர்," என்கிறார் வடிவேலு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!