சந்தானம் படத்துக்கு சிம்புவின் இசை

சந்தானம் நடித்து வரும் 'சக்கப் போடு.. போடு ராஜா' படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகர் சிம்பு. இது கோடம்பாக்க வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இப்படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து விளக்க மளித்துள்ளார் சிம்பு. சந்தானம் நடிக்கும் புதிய படமான 'சக்கப் போடு... போடு ராஜா'வை விடிவி கணேஷ் தயா ரிக்கிறார். இதில் 'சர்வர் சுந்தரம்' நாயகியான வைபவி ஷாந்தலியா ஒப்பந்தமாகி உள்ளார். ரோபோ சங்கர், சம்பத், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பதில் படக்குழு ரகசியம் காத்து வந்தது.

இந்நிலையில், நடிகர் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். "இசையமைக்க கேட்டார்கள், நானும் கதையைக் கேட்டேன். நன்றாக இருந்தது ஒப்புக்கொண் டேன். சந்தானம் படமாக இல்லா மல், வேறொருவர் படமாக இருந் திருந்தால் யோசித்திருக்க வாய்ப்பு உண்டு. எனக்கு இசையின் மீது ஆர்வம் அதிகம் என்பதால் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பது ஒன்றும் புதிய விஷய மல்ல என நினைக்கிறேன். இசைய மைப்பது குறித்த பயமெல்லாம் எனக்கு இல்லை. இசைப்பணியை நல்லபடியாக முடித்துக் கொடுப் பேன்," என்கிறார் சிம்பு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!