‘ரா.. ரா.. ராஜசேகர்’

"எது மாற வேண்டுமென நினைத்து `காதல்' படத்தை எடுத்தேனோ, அது கொஞ்சம்கூட மாறவில்லை. முன்னைவிட இப்போதுதான் ஆணவக் கொலைகள் அதிகமாக நடக்கிறது. அதை எல்லாம் தடுக்க வேண்டுமானால் எப்போதும் இதைப் பற்றி நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். "சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக நம் குரல் ஒலித்தபடியே இருக்க வேண்டும். படம் எடுத்தால் மட்டும் போதாது. படம் எடுக்கிறவர்கள் அதற்கு எதிரான போராட்டங்களிலும் பங்கேற்க வேண்டும்.

"எனது புதிய படமும் சாதி ஆணவக்கொலைகள் பற்றித்தான் பேசுகிறது," என்று பாலாஜி சக்திவேல் பொறுப்புடன் பேசுகிறார். `காதல்' மாதிரியே இதுவும் உண்மைச் சம்பவம் தானாம். இது மாதிரியான சம்பவங்கள் இனிமேல் நடக்கவே கூடாது என்ற அக்கறையில்தான், தொடர்ச்சியாக உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து படங்கள் எடுப்பதாகச் சொல்கிறார். "என் கதைக்குப் புதுமுகங்கள்தான் பொருந்து வர். அவர்களுடன் பணியாற்றுவது சுலபம். நாயக னாக இயக்குநர் லிங்குசாமியின் மருமகன் நடித்துள் ளார். 'லூஸியா' கன்னடப் படத்தில் நடித்த ஸ்ருதி தான் நாயகி," என்கிறார் பாலாஜி சக்திவேல்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!