‘வாழ்வை மாற்றிய பயணம்’

"முன்பு நான் பயணங் கள் மேற்கொள்ளும்போது எனக்குப் பாதுகாப்பு அளிக் கவும் உடன் வரவும் நிறைய பேர் இருந்தார்கள். முதன் முறையாக நான் தனியாக அந்த ரி‌ஷிகேஷ் பயணத்தை மேற்கொண்டேன். உண்மையில் என் வாழ்க்கைக்கு அந்தப் பயணம் மிகவும் அத்தியாவ சியமானதாக இருந்தது. "அந்த நேரத்தில் நான் வற்றிப்போன ஆறு போன்று இருந்தேன். வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று அறியாத அவஸ்தை எனக்கு ஏற்பட்டிருந்தது. எனக்குத் தெளிவைத் தந்தது அந்த ரி‌ஷிகேஷ் பயணம்தான்.

"நான் இமயமலையில் ஏறுவது பற்றி அப்பா, அம்மாவிடம் முன்பே கூறவில்லை. அப்படி அவர்களிடம் சொல்லி இருந்தால் அங்கு போக வேண்டாம் என்று தடுத்துவிடுவார்கள் என நினைத்தேன். பத்து நாட்களில் 110 கிலோமீட்டர் தூரம் வரை ஏறினேன். 11 ஆயிரம் அடி உயரம் வரை சென்றேன். "குறிப்பிட்ட உயரம் சென்றதும் நான் எடுத்துச் சென்ற பையையும் தூக்கிக்கொண்டு அதற்கு மேல் செல்ல முடியாது என்பதை உணர்ந் தேன். அதனால் அத்தியாவசியப் பொருட்களைத் தவிர மீதி அனைத்தையும் அங்கேயே போட்டு விட்டேன். அதற்கு மேல் இரவாகிவிட்டது. "அங்கு போதுமான அளவு பிராணவாயு கிடைக்கவில்லை. திரும்பிப் போய்விடலாமா என்று கூட நினைத்தேன். இரவு கெட்ட கனவு களாக வந்தது. சிறிய கூடாரத்துக்குள் சிக்கி பிராணவாயு கிடைக்காமல் திணறுவதாகக் கனவு கண்டு அலறியடித்துக்கொண்டு விழித் தேன். கூடாரத்தை விட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்தேன். நட்சத்திரக் கூட்டம்.

கையை நீட்டித் தொட்டுவிடலாம் போன்று தோன்றியது. அதுவரை இருந்துகொண்டிருந்த சுவாச நெருக்கடி அப்போதே நீங்கியது. "மறுநாள் விடிந்தபோதுதான் பூமியின் சொர்க்கத்தின் அருகில் இரவெல்லாம் தூங்கி யிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அவ்வளவு அற்புதமான இடம். "வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவினை எடுப்பதற்கு முன்பு அந்த பயணத்தை மேற்கொண்டேன். எனக்கு முன்னால் இரண்டு வழிகள் இருந்தன. அதில் எதை தேர்ந்தெடுப்பது என்ற சந்தேகத்தைத் தீர்க்க அந்தப் பயணத்தை மேற்கொண்டேன். பயணத்தின் முடிவில் நான் விடையைக் கண்டுபிடித்தேன். "அந்தப் பயணத்துக்குப் பின்னர் எனது கோணங்கள், பார்வைகள் மாறிவிட்டன. நான் இப்போது புதிய மனிதப்பிறவி," என்று உற்சா கத்துடன் சொல்கிறார் அமலா பால்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!