மீண்டும் நகைச்சுவைக் கூட்டணி அமைக்கும் இரு நடிகர்கள்

சத்யராஜும் வடிவேலுவும் பல படங்களில் இணைந்து நடித்துள் ளனர். தற்போது தமிழ்ப் படங் களில் மறுபிரவேசம் செய்திருக்கும் வடிவேலு சத்யராஜுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். மலையாளத்தில் வெற்றிபெற்ற 'கட்டப்பனயிலே ரித்விக்ரோஷன்' படம் தமிழில் மறுபதிப்பு ஆகிறது. மலையாளத்தில் இயக்கிய நதிர்ஷாதான் தமிழிலும் இப் படத்தை இயக்கப்போகிறார். பிரபல மலையாள நடிகர் திலீப் தயாரிக்க உள்ளார். இதில்தான் சத்யராஜும் வடிவேலுவும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் விரை வில் தொடங்க உள்ளதாகவும் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு `6.2', `அசத் தல்', `சவுண்ட் பார்ட்டி', `கோவை பிரதர்ஸ்', `லூட்டி', `பெரிய மனுஷன்', `இங்கிலீஷ்காரன்', `மண்ணின் மைந்தன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் சத்யராஜ், வடிவேலு நகைச்சுவைக் கூட்டணி ரசிகர்களை வயிறு குலுங்க வைத்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் இக் கூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. "சத்யராஜ் சாருடன் சேர்ந்து நடிப்பது உற்சாகமான அனுபவ மாக இருக்கும். அவர் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்," என்கிறார் வடிவேலு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!