கவர்ச்சியை நிராகரிக்கும் சுனைனா

தன்னைக் கவர்ச்சியான வேடங்களில் நடிக்கவே இயக்குநர்கள் அழைப்பதாக நடிகை சுனைனா தெரிவித்துள்ளார். மும்பையில் இருந்து வந்து தமிழ்ப் படங்களில் பிரவேசமானவர் சுனைனா. 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'பாண்டி ஒலி பெருக்கி நிலையம்' ஆகிய படங்களில் சுனைனா சில காட்சிகளில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். 'வம்சம்', 'நீர்பறவை ஆகிய படங்களில் இவரது பாங்கான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது சமுத்திரக்கனி இயக்கி நடித்து வரும் 'தொண்டன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சுனைனா.

"இனி அழுத்தமான வேடங்களில் நடிக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. "ஆனால் பல இயக்குநர்கள் என்னைக் கவர்ச்சியான வேடங்களில் நடிக்கத்தான் அழைக்கிறார்கள். அவற்றை நிராகரிக்கிறேன். சமுத்திரக்கனி போன்ற பெரிய இயக்குநருடன் நல்ல வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு இப்போது எனக்குக் கிடைத்திருக்கிறது. இது போன்ற நல்ல பாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். "தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போதெல்லாம் தரமான படங்களை, சிறந்த நடிப்பை உடனுக்குடன் அங்கீகரிக்கவும் வரவேற்கவும் தயங்குவதே இல்லை. இதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்கிறார் சுனைனா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!