விஜய் சேதுபதி ஜோடியான தான்யா

'கருப்பன்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனனுக்குப் பதில் தான்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் நாயகி கதாபாத்திரத்துக்கு மடோனா செபாஸ்டின், கீர்த்தி சுரேஷ், ரித்திகா சிங் உள்ளிட்ட நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியாக லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்தது படக்குழு. .ஆனால், நடன ஒத்திகையின்போது காலில் அடிபட்டதால் லட்சுமி மேனனால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால், லட்சுமிமேனனுக்குப் பதிலாக தான்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாபி சிம்ஹா, கிஷோர் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. "விஜய் சேதுபதி ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி. இப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை," என்கிறார் தான்யா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!