திடீரென மதிப்பு இழந்த ஹன்சிகா

ஹன்சிகாவின் திரையுலகச் சந்தை மதிப்பு திடீரென அதலபாதாளத்துக் குச் சரிந்துள்ளது. ஒன்றரைக் கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்த அவருக்கு இப்போது 50 லட்சம் தரவும் கூட தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்களாம். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் ஹன்சிகா. இப்படத்தில்தான் அவரது சம்பளம் ஐம்பது லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த வாய்ப்பு தானாகத் தேடி வரவில்லையாம்.

ஹன்சிகாவே பலமுறை ஜி.வி.பிரகாஷை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு, தனக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டதற்குப் பிறகே ஒப்பந்தமானாராம். இப்படத்தை எழில் இயக்க, சமந்தாவும் ஹன்சிகாவும் ஜி.வி.யுடன் சேர்ந்துள்ளனர். இப்படத்திற்கு ஐம்பது லட்சம்தான் சம்பளம் தர முடியும் என்று சொன்ன எழிலிடம், தயக்கமின்றிச் சம்மதம் தெரிவித்துள்ளார் ஹன்சிகா. தரை மட்டத்திற்கு இறங்கி வந்த ஹன்சிகாவின் செயல் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!