ஷ்ருதி: மன பலமே சிறந்தது

கணவன், மாமியார் வற்புறுத்தலுக்காகத் திருமணமான நடிகைகள் சினிமாவை விட்டு விலகக்கூடாது என்று நடிகை ஷ்ருதிஹாசன் கூறியுள்ளார். படங்கள் வெற்றி பெற்றால் அதில் நடித்த கதாநாயகனைப் புகழ்ந்து பேசுவதையும் கதாநாயகியைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதையும் சகஜமாகப் பார்க்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். "நான் சினிமாவுக்கு வந்து 7 ஆண்டு கள் ஆகின்றன. ஆரம்ப காலத்தை விட, இப்போது என்னிடம் மாற்றம் ஏற்பட்டு சவாலான விஷயங்களைத் தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் வந்து இருக் கிறது. வாழ்க்கையும் தெளிவாகி இருக்கிறது.

"பிரபலமாக இருப்பதால் விமர்சனங் களை எதிர்கொள்ள வேண்டிய சங்க டங்கள் இருக்கின்றன. அவற்றைச் சாதக மாகவே எடுத்துக்கொள்கிறேன். அது பற்றி நான் பொருட்படுத்துவது இல்லை. என் னுடையை கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததா? நான் நன்றாக நடித்து இருக்கிறேனா? என்றுதான் சிந்திக்கிறேன். "இப்போது சினிமாவில் பெண்களும் ஆதிக் கம் செலுத்த ஆரம்பித்து உள்ளனர். கதா நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதா பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டனர். "என் தந்தையை விட்டு கவுதமி பிரிவதற்கு நீங்கள்தான் காரணமா? என்று என்னிடம் கேட்கப்படுகிறது. எனது தந்தையின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக நான் பேச விரும்பவில்லை. மற்றவர்களின் சொந்த வாழ்க்கை பற்றியும் பேசும் பழக்கம் இல்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!