மகளிர் மட்டும் திரைப்படத்துக்கான முன்னோட்டத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தேசிய விருதை வென்ற திரைப்படம் 'குற்றம் கடிதல்'. இப்படத்தை இயக்கி யவர் பிரம்மா. அடுத்து இவர் இயக்கும் 'மகளிர் மட்டும்' படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படமாக இது இருக்குமாம். இப்படம் முழுவதிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக் கிறார் பிரம்மா. சூர்யாவின் '2டி நிறுவனம்' மற்றும் 'கிரிஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
லிவிங்ஸ்டன், நாசர், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங் களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், "பெண்கள் தான் ஆண்களுக்கு தோசை சுட்டுக் கொடுக்கிறோம். ஆனால் ஆண்கள் நமக்கு ஒரு நாளா வது தோசை சுட்டுக் கொடுத்துள் ளார்களா?" என்று கேள்வி எழுப்பும் அடிப்படையில் அமைந்துள்ள கருத்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த முன்னோட்டத்தை விளம்பரப் படுத்தும் நோக்கில் இணையத்தளத்தில் 'ஹேஷ்டேக்' ஒன்றை உருவாக்கி, அதில் உங்களுடைய அம்மா, மனைவி உள்ளிட்டவர்களுக்குத் தோசை சுட்டுக் கொடுத்து புகைப்படங்களை பதிவிடலாம் என்று அறிவித்தது படக் குழு. மேலும், நீங்கள் வேறொருவருக் குக் கூட சவால் விடலாம் என்று தெரிவித்தது.
'மகளிர் மட்டும்' படத்தில் இடம்பெறும் காட்சியில் ஜோதிகா.