திரிஷா அண்மையில் நடந்த ஜல்லிக்கட்டு விவகாரத்தால் பலவகையில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். காரணம் இவர் 'பீட்டா' அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழ்நாட்டில் அவருக்கு எதிராக "இனிமேல் திரிஷா நடிக்கும் படங்களை நாங்கள் புறக்கணிப்போம்," என்று கூறியிருந்தனர். அதன் தொடர்ச்சியாய் திரிஷா நடிக்கும் படத்துக்குத் தமிழ்நாட்டில் ஆதரவு இருக்காது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் திரிஷா நடிக்கும் படங்களைத் திரையரங்கு களில் திரையிட அனுமதிக்கமாட் டோம் என்றும் இளைஞர்கள் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின் றனர்.
'கவண்' படத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின் தோன்றும் காட்சி.