ஆண் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தெடுங்கள் என நடிகை வரலட்சுமி

சரத்குமார்

பெண்களுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என கற்றுத் தருவதைவிட, ஆண் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்தெடுங்கள் என நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது பேஸ்புக் பகிர்வில் தெரிவித்துள்ளார். தாம் சந்தித்த ஒரு மோசமான அனு பவம் பற்றியும் விரிவாகப் பகிர்ந்துள்ளார் அவர். இது தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை பாவனா சிலரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதையடுத்து, திரை யுலகத்தினர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமக் கும் பாலியல் தொல்லைகள் இருந்ததாக வரலட்சுமி கூறியுள்ளார். "இதை எழுதலாமா, வேண்டாமா என 2 நாட்கள் கடுமையாக எனக்குள் விவாதித்த பிறகே தற்போது எழுதுகி றேன். இன்றைய சமூக ஊடக உலகில், நேர்மையான வார்த்தைகளைப் பேசினா லும் கூட, அவை தவறாக மதிப்பிடப்படு கின்றன.

இனிமேல் அது நடக்கக்கூடாது. "முன்னணித் தொலைக்காட்சி ஒன்றின் தலைமை நிகழ்ச்சி வடிவமைப்பாளர் ஒருவருடன் வேலை தொடர்பான சந்திப்பில் இருந்தேன். அந்த அரை மணி நேர சந்திப்பு முடியும்போது, 'நாம் எப்போது வெளியே சந்திக்கலாம்' என அவர் கேட்டார். அதற்கு, 'வேறு ஏதாவது வேலை தொடர்பாகவா?' என நான் கேட்டேன். அதற்கு அவர், (அதுதான் வழக்கம் என்பதுபோல் அற்பத்தனமான சிரிப்புடன்), 'இல்லை இல்லை, வேலை தொடர்பாக இல்லை. மற்றவைகளுக்காக' என்றார். "நான் எனது அதிர்ச்சியையும் கோபத் தையும் மறைத்துக்கொண்டு, 'மன்னித்து விடுங்கள், தயவு செய்து கிளம்புங்கள்' என்றேன். கடைசியாக அவர், 'ஓ அவ்வளவுதானா?' என சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே நடந்து சென்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!