பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் ரெஜினா

எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் படம் 'மாநகரம்'. சந்தீப், ஸ்ரீ, ரெஜினா, சார்லி, மூனீஷ்காந்த் நடிக்கும் இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இந்தப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக் காக வந் திருந்த ரெஜினா, செய்தி யா ள ர் க ளு க் கு ப் பேட்டியளித்தார். அப்போது அவரி டம் பாவனா விவகாரம் குறித்துக் கேட்டபோது அதற்குப் பதிலளித்த ரெஜினா, பெண்கள் சற்றுக் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்றார். "சுற்றி இருப்பவர்களை நம்பித்தான் நாம் வேலை செய்கிறோம். அவர் களே குற்றவாளியாக மாறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

"நான் தமிழ்ப் படத்தில்தான் அறிமுகமானேன். அப்போது தொலை பேசி மூலம் நடிக்க அழைப்பார்கள். அவ்வாறு கைத்தொலைபேசி மூலம் அழைத்த ஒருவர் எல்லாம் பேசி முடித்த பிறகு தயங்கியபடி அட்ஜெஸ் மெண்ட் பண்ணிக்குவீங்களா என்று கேட்டார். அப்போது எனக்கு அதன் பொருள் தெரியாது. பின்னர்தான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு எனக்கு அப்படிப்பட்ட அழைப்புகள் வரவில்லை. ஒருவரி டம் கதை கேட்பதாக இருந்தால்கூட அவரது பின்னணியைத் தெரிந்து கொண்ட பின்தான் கேட்பேன். நாம் கவன- மாக இருந்தால் யாரு டைய உதவி- யும் தேவையில்லை. கவனமாக இருப்பதுதான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முதல் ஆயுதம். மேலும் பாவனா பாலியல் துன்- புறுத் தலுக்கு ஆளானதை ஊடகங்- கள் ஊதிப் பெரிதுபடுத்துவது நல்லதல்ல," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!