சவாலான வேடத்தில் நடிக்கும் திரிஷா

திரிஷாவுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அனுஷ்கா சர்மா நடிப்பில் நவ்தீப் சிங் இயக்கத்தில் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'என்.எச்-10'. கண் முன் நிகழும் ஆணவக் கொலைக்குக் காரணமான குடும்பத்துக்கு எதிராக ஒரு சாமானியப் பெண்ணான அனுஷ்கா சர்மா ஆயுதமேந்தும் விறுவிறுப்பான கதை. இதைத் தமிழில் 'கர்ஜனை' என்ற தலைப்பில் மறுபதிப்பு செய்து வருகிறார் அறிமுக இயக்குநர் சுந்தர்பாலு. அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தை திரிஷா ஏற்றுள்ளார். இதில் நிறைய சண்டைக் காட்சிகள் உள்ளனவாம். சவாலான வேடத்தை ஏற்றிருக்கும் திரிஷாவுக்குச் சண்டை இயக்குநர் சுப்ரீம் சுந்தர் பயிற்சி அளித்து வருகிறார். இந்தப் படத்தில் திரிஷாவுக்கு சண்டைக் காட்சிகளில் டூப் கிடையாது என்பதால்தான் இந்தப் பயிற்சியாம்.

மேலும் செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg

2017-03-02 06:00:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!