அதிதி: புதிய அனுபவம் கிடைத்தது

அமீர் இயக்கி வரும் 'சந்தனத்தேவன்' படத்தில் கண்டாங்கி சேலை கட்டி நடித்தது புதிய அனுபவமாக இருந்ததாக பட நாயகி அதிதி மேனன் கூறியுள்ளார். 'பட்டதாரி' படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதி மேனன். அடுத்து அமீர் இயக்கும் 'சந்தனதேவன்' படத்தில் நடிக்கிறார். 1980 கால கட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும், இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த 21ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ஒரு பாடலுக்கான நடன காட்சியை அமீர் படமாக்கினார். இதில் நடித்தது குறித்து அதிதிமேனன் கூறும்போது, "கேரளத்து பெண்ணான நான், இதில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். கதைப்படி நான் இதில் ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு ஜோடியாக வருகிறேன். "ஒரு பாடல் காட்சியில் கண்டாங்கி சேலை கட்டி நடித்தேன். அந்தத் தோற்றம் என்னை முழுவதும் மாற்றிவிட்டது. என் வாழ்க்கையில் முதன் முதலாக கண்டாங்கி சேலை கட்டியது இப்போதுதான். இப்பாடலுக்கு நடனம் ஆடியது புதிய, இனிய அனுபவம்," என்கிறார் இளம் நாயகி அதிதிமேனன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!