ரித்திகா சிங்: குடிகாரியாக நடிக்க ஆசை

நடிப்புக்கே இனி முக்கியத்துவம் தர உள்ளேன். வித்தியாசமான கதா பாத்திரங்களை ஏற்க விரும்பும் அதேநேரத்தில் குடிகாரியாக கலாட்டா செய்வது, போதை மருந்துக்கு அடிமை யாவது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆவலுடன் உள்ளேன். இதுபோன்ற பழக்கம் எனக்குக் கிடையாது. ஆனால் அந்தப் பாத்திரங்களில் நடிப்பது காமெடியாக இருக்கும் என்கிறார் ரித்திகா சிங். நிஜ குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், 'இறுதிசுற்று' படத்தில் மாதவன் ஜோடியாக அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். "சிவலிங்கா நான் நடிக்கும் திகில் படம். லாரன்ஸ் நாயகன் மட்டுமல்ல; சிறந்த நடன ஆசிரியர். அவருடன் நடனமாடுவது சவாலாக இருந்தது. விழுந்து எழுந்து அடிபட்டு நடனமாடிவிட்டேன். அடுத்து 'வணங்கா முடி' படத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறேன்," என்கிறார் ரித்திகா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!