தவிக்கும் நாயகிகள்

லட்சுமி மேனன்: 'கும்கி' மூலம் அறிமுகமான லட்சுமி மேனனுக்கு இன்னும் இருபத்திரண்டு வயதுகூட நிரம்பவில்லை. ஆனால் 'ஆண்ட்டி' என்று சொல்லும் அளவுக்கு எடையேறிவிட்டதாம்.

அஞ்சலி: தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்த அஞ்சலிக்கு இடைக்காலத்தில் ஏறிய எடையே எதிரி யாகிப் போனது. அவர் நடித்த சகலகலாவல்லவன், மாப்ள சிங்கம், இறைவி படங்களில் ஏறிய உடம்பு உறுத்தலாக இருக்கவே அடுத்தடுத்துப் படங்கள் எதுவும் இல்லை. காதலர் ஜெய்யுடன் நடிக்கும் 'பலூன்' படம் மட்டுமே கையில் இருக்கிறது. அதனால் கூடிய விரைவில் அஞ்சலியின் கல்யாண செய்தி வெளியானாலும் ஆச்சரியம் இல்லை.

அனுஷ்கா: 'இஞ்சி இடுப்பழகி' படத்துக்காக ஏற்றிய உடலை இளைக்க வைக்க படாதபாடுபட்டு வருகிறார். படத்தின் கதைக்காகச் சிரமம் எடுத்து உடலை ஏற்றினார் அனுஷ்கா. அந்த எடை இறங்க மறுக்க, பாகுபலியையும் பதம் பார்த்தது அதிக எடை. இன்னமும் பழைய நிலைக்கு வர முடியாமல் தவிக்கிறார் அனுஷ்கா.

கீர்த்தி சுரேஷ்: .முன்னணி நாயகர்களுடன் இணையும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ள நிலையில் இப்போதே பூசினாற் போல் ஆகிவிட்டாராம் கீர்த்தி சுரேஷ். முன்னாள் நடிகை மேனகாவின் மகளான இவருக்கு அம்மாவின் உணவுக் கட்டுப்பாடு ஆலோசனைகளும் கை கொடுக்கவில்லையாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!