சிக்கலில் இருந்து வெளிவராத ‘மொட்ட சிவா கெட்ட சிவா’

'மொட்ட சிவா கெட்ட சிவா' திரைப் படம் மார்ச் 10ஆம் தேதி சிக்கிலின்றி வெளியாகுமா என்பதில் விநியோகஸ் தர்களிடையே குழப்பம் நீடிக்கிறது. சாய் ரமணி இயக்கத்தில் லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் உருவான இப்படத்தின் வெளியீட்டு உரிமையை மதன் பெற்றிருந்தார். இப்படம் வெளியாக இருந்த தரு ணத்தில் பண மோசடி விவகாரத்தில் மதன் கைது செய்யப்பட்டதால் இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து வெளியீட்டு உரிமையை மதனிடமிருந்து சிவபாலன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி பிப்ரவரி 17ஆம் தேதி வெளியீடு என அறிவித்தது. லாரன்ஸ் தனது முழு சம்பளத்தை விட்டுக் கொடுத்தது மட்டுமின்றி கூடுதலாக கணிசமான தொகையைத் தர, பைனான்சியர்களும் கொஞ்சம் பணம் தர அதன் பிறகும் இப்படத்தின் மீதுள்ள பணச்சிக்கல் தீரவில்லை. ஒவ்வொரு வாரமும் படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறார்கள்.

'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தில் லாரன்ஸ், நிக்கி கல்ராணி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!