ரவியுடன் சிங்கப்பூர் நடிகர்

சிங்கப்பூர் நடிகர் ஒருவர் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க உள்ளார். 'மிருதன்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி மீண்டும் 'டிக் டிக் டிக்' என்ற படத்தின் மூலம் இணைந்திருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். விண்வெளியை மையப்படுத்தி உருவாகிவரும் முதல் இந்தியப் படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இந்தப் படப்பிடிப்பு பிரம்மாண்ட பொருட்செலவில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜீஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆரோன் அஜீஸ் 'கே.எல்.கேங்ஸ்டர்' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர். பல இந்தியப் படங்களுக்காக அணுகியும் நடிக்க ஒப்புக்கொள்ளாத அஜீஸ் 'டிக் டிக் டிக்' படத்தின் திரைக்கதையைப் படித்ததும் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆரோன் அஜீஸின் வருகை இப்படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!