இனியா: அனுஷ்காவிற்கு ஏற்பட்ட நிலை எனக்கு வேண்டாம்

அமீர் இயக்கி நடிக்கும் 'சந்தனத்தேவன்' என்ற படத்தில் நடிக்க இனியா ஒப்பந்தமாகி படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அமீர், தனக்கு ஜோடியாக நடிக்கும் இனியாவிடம் உடல் எடையை அதிகரித்துக்கொண்டு வரச் சொன்னதன் காரணமாக அந்தப் படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார் இனியா. தமிழ்த் திரையில் எதார்த்தமான படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளவர் இயக்குநர் அமீர். திரைக்கதையின் மூலம் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அமீரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அமீர் ஆர்யாவை வைத்து 'சந்தனத்தேவன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ஆர்யா, சத்யா, அமீர் மூவரும் ஜல்லிக்கட்டு வீரரர்களாக நடிக்கின்றனர். இப்படத்தை அமீரின் 'அமீர் பிலிம் கார்ப்பரேசன் (ஏஎப்சி)' நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக அதிதி மேனன் நடிக்கிறார். முன்னதாக அமீருக்கு ஜோடியாக நடிக்க இனியாவிடம் கேட்கப்பட்டது. அவரும் நடிக்க சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருந்தார். அந்த வேடத்தில் நடிக்க குண்டாக இருக்க வேண்டும் என்று அமீர் கேட்டுக் கொண்டார். உடல் பெருத்துவிட்டால் மெலிவது சாதாரண வி ஷயம் அல்ல. அண்மையில் வெளியான 'இஞ்சி இடுப்பழகி' என்ற படத்தின் கதைக்காக ஒல்லியாக இருந்த அனுஷ்கா அதிகமாக சாப்பிட்டு உடல் எடை அதிகரித்து குண்டான பெண்ணாக நடித்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!