நடிகை வேடத்தில் நடிக்கும் சமந்தா

பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் என்னவென்று தற்போது வெளியாகியுள்ளது. மறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக தயாராக இருக்கிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நாக் அஷ்வின் இயக்குகிறார். இதில் நடிக்க சமந்தாவும் கீர்த்தி சுரே‌ஷும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தனர். இதில், கீர்த்தி சுரேஷ்தான் சாவித்திரியாக நடிப்பார் என்று படக்குழுவினர் கூறியிருந்தனர்.

இதையடுத்து சமந்தாவின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று அனைவர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், சமந்தாவின் கதாபாத்திரம் பற்றி தெரிய வந்துள்ளது. அதன்படி, சமந்தா இப்படத்தில் சாவித்திரி காலத்தில் நடித்துவந்த மற்றொரு நடிகையான ஜமுனாராணி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். சாவித்திரிக்கு சக போட்டியாளராக ஜமுனா ராணி திகழ்ந்துள்ளார். இருவருக்கும் தொழில்ரீதியாக போட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!