‘வேலைக்காரன்’ படத்தில் சிவகார்த்திகேயன்

'வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் 'வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் அவருக்கு ஜோடி நயன்தாரா. மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் உள்ளனர். இப்படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு சிவகார்த்திகேயன் ஆலை ஒன்றில் வேலை செய்யும் தொழிலாளியாக நடிக்கிறாராம். தனது ஒவ்வொரு படத்திலும் ரஜினி பாணியைப் பின்பற்றும் சிவகார்த்திகேயன், இந்தப் படத்திலும் அதே வழியைப் பின்பற்றி உள்ளார். 'மன்னன்' படத்தில் ரஜினி ஆலை தொழிலாளியாக நடித்திருப்பார். அதேபோல் இப்புதிய படத்தில், பெரும்பாலான காட்சிகளில் காக்கி பேண்ட், காக்கி சட்டை அணிந்துதான் நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!