தனக்கு திடீர் நிச்சயதார்த்தம் நடந்தது குறித்து நடிகை பாவனா விளக்கம் அளித்துள்ளார். 'சித்திரம் பேசுதடி' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் பாவனா. தொடர்ந்து 'தீபாவளி', 'அசல்' ஆகிய தமிழ்ப்படங்களிலும் சில மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார். பாவனா கடந்த சில ஆண்டுகளாக படத் தயாரிப்பாளர் நவீன் என்பவரைக் காதலித்து வந்தார். இவர்களது திருணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்களின் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டு திரும்பியபோது, கார் ஓட்டுநர் உட்பட சிலர் பாவனாவுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி, அதன் முடிவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் பாவனாவின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது என்ற தகவல் திடீரென வெளியானது. ரகசியமாகவும் எளிமையாகவும் நடந்தேறிய நிச்சயதார்த்தம் குறித்து பாவனா விளக்கம் அளித்துள்ளார். "நவீன், அவரது குடும்பத்தாருடன் சம்பிரதாயத்துக்காக எங்கள் வீட்டுக்கு என்னைப் பெண் பார்க்க வந்தார். இரு வீட்டுக்காரர்களும் பேசிக் கொண்டிருந்தபோது உடனே மோதிரம் மாற்றிக் கொள்ளலாமே என்ற பேச்சு வந்தது.