கபிலன்: வெளிச்சம் நிறைந்த தொடக்கம்

கவிஞர் கபிலன் வைரமுத்து 'கவண்' படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் எழுத்தாள ராக அறிமுகமாகிறார். கவிதை, சிறுகதை, நாவல், பாடல் வரிசையில் இப்போது கதை, திரைக்கதை வசனமும் எழுதத் தொடங்கியிருக்கிறார். இந்தப் புதிய அவதாரம் குறித்து அவர் அளித்துள்ள அண்மைய பேட்டி இது. "எழுத்தாளர்கள் சுபாவும் நானும் இணைந்து இந்தப் படத்தின் வசனங்களை எழுதி யிருக்கிறோம். இதில் விஜய் சேதுபதி, விக்ராந்த் இருவரும் ஏற்றிருக்கும் கதாபாத்திரங்கள் என் தனிப்பட்ட இயல்போடு ஒன்றிப்போகும் பாத்திரங்கள். "வசனம் எழுதும்போது அந்தக் கதாபாத்திரமாக மாற வேண்டிய அவசியமில்லாமல் நான் நானாகவே இருந்து எழுத முடிந்தது.

டி.ராஜேந்தருக்கு வசனம் எழுதியது சுவாரசியமான அனுபவம். இந்த படத்தில் நீங்கள் எழுதி யிருக்கும் மூன்று பாடல்களில் உங்களுக்குப் பிடித்தது? "மாத்துறாய்ங்களாம் எதையோ மாத்துறாய்ங்களாம். ஆளே இல் லாத கடையில டீய ஆத்துறாய்ங் களாம்'." 'விவேகம்' படத்தில் உங்க ளுடைய பங்களிப்பு என்ன? "எழுத்தாளராகவும் பாடலாசி ரியராகவும் பங்களித்து வருகி றேன். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அப்பாவின் உயரம் உங்களுக்கு பாரமாக இருக்கிறதா? "வானம் பறவைக்குப் பாரம் ஆகாது." "வாடிவாசல், நெடுவாசல் நிகழ்வுகளால் சமூகத்தின் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது. "பொழுது போக்கு சாதனங் களிலும் ஐபிஎல் மைதானங் களிலும் இளையர்களைப் புதைக்க நினைத்த முதலாளித்துவ அரசி யலுக்கு இது பலமான சவுக்கடி," என்கிறார் இளம் படைப்பாளியான கபிலன் வைரமுத்து.

'கவண்' படத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!