கணவரைப் பிரிந்த துக்கத்தில், நடிகை அமலாபால் மன அமைதிக்காக தினமும் யோகா செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அமலாபால் தற்போது தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்கிறார். 'ஆயுஷ்பவன்' என்ற இந்த படத்தில் அமலாவுக்கு இந்து வாலிபனைக் காதலிக்கும் முஸ்லிம் பெண் வேடம். இந்தப் படத்தில் அமலாபாலின் காதலுக்கு ஆதரவு அளிக்கும் வேடத்தில் சினேகா உல்லல் நடிக்கிறார்.
இதற்கிடையே மனநிம்மதிக்காக யோகா, தியானம் ஆகியவற்றில் அமலாபால் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தினமும் யோகா, தியானம் ஆகியவற்றைத் தவறாமல் செய்து வருகிறார். இதனால் மன அமைதி கிடைப்பதாகவும் கவலைகளை மறக்க முடியும் என்றும் கூறியுள்ளார். தினமும் காலையில் விதம் விதமான யோகாசனம் செய்யும் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து யோகாசனம் செய்வதை வலியுறுத்தி இருக்கிறார்.