நோன்புப் பெருநாளுக்கு விருந்து

கௌதம் மேனனுக்குத் தற்போது சிரம திசைபோல. அவர் எடுக்கும் படங்கள் பாதியில் நின்று விடுகின்றனர். தனுஷ் கதாநாயகனாக நடிக்க 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை ஆரம்பித்தார் கௌதம் மேனன். சில பிரச்சினைகளால் அப்படம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளும் முடங்கிப்போயின. அதன் பிறகு பஞ்சாயத்து நடைபெற்று பின்னர் படப்பிடிப்பு நடைபெற்றது. 'எனை நோக்கி பாயும் தோட்டா' தற்போது வெளியீடுக்குத் தயாராக இருக்கிறது. ஏற்கெனவே இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இசை அமைப்பாளர் யார் என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளார் கௌதம் மேனன். தனு‌ஷுக்கு ஜோடியாக புதுமுகம் மேகா ஆகாஷ் நடித்துள்ளளார். 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தைத் தெலுங்கிலும் வெளியிடும் திட்டத்தில் 'பாகுபலி' ராணாவை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைத்திருக்கிறார் கௌதம் மேனன். நோன்புப் பெருநாள் விருந்தாக இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!