நாடகத் துறையில் உள்ள கலைஞர் களின் வாழ்க்கையைப் பற்றி விளக்கும் படமாக உருவாகி வருகிறது 'மோகனா'. இதை 'மோரா பிக்சர்ஸ்' என்ற நிறுவனம் தயாரிக்கிறது. 'செவிலி' படத்தை இயக்கிய ஆர்.ஏ.ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார். மொட்டை ராஜேந்தி ரன், பவர் ஸ்டார் சீனிவாசன், கல்யாணி நாயர், உமா ஹரீஷ், மோரா, மும்பை சீனுஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். "இப்படம் நாடக கலைஞர் களைப் பற்றிய படம். அவர்களின் உண்மையான வாழ்க்கையை பிரதி பலிக்கும் வகையில் படத்தை உருவாக்கி உள்ளோம். "இதில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிகர் கதாபாத்திரத்திலேயே தோன்றுவார். அவருக்கு மோகனா எனும் நாடக நடிகை மீது ஒரு தலையாகக் காதல் மலர்கிறது.
'மோகனா' படத்தில் மொட்டை ராஜேந்திரன், கல்யாணி.