கீர்த்தியின் சம்பள உத்தி

தான் நடிக்கவுள்ள படம் எத்தனை மொழிகளில் வெளியாகிறது என்பதைப் பொறுத்து தனது சம்ப ளத்தை நிர்ணயிக்கும் புதிய உத்தியைக் கடைப்பிடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். அறிமுகமான சில படங்களிலேயே முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். போதாத குறைக்குத் தெலுங்குப் பக்கம் போய் அங்கும் ஒரு வெற்றிப் படத்தை கொடுத்து விட்டார். இதனால் கீர்த்தி சுரே‌ஷின் மார்க்கெட்டும் சம்பளமும் எகிறி உள்ளது.

இந்நிலையில், கீர்த்தி அடுத்து நடிப்பது முன்னாள் நடிகை சாவித் தி ரி யி ன் வாழ்க்கை வர லாற்று படத் தில். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராவதால் மூன்று கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருக்கிறார். தயாரிப்பாளரும் சம்மதம் சொல்லி விட்டாராம். ஒரே ஒரு மொழியில்தான் படம் வெளி யாகிறது என்றால் இரண்டு கோடி சம்பளமாம். தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா, அனுஷ்காவுக்கு அடுத்து மூன்று கோடியைத் தொட்டிருப்பது கீர்த்தி சுரேஷ்தான். தனது அபார வளர்ச்சியால், அவர் எவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாராகவுள்ளார்கள் தயாரிப்பாளர்கள். இதற்கிடையே, சேலத்தில் நகைக்கடை ஒன்றிற்கு வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷைக் காண திரண்ட ரசிகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!