‘லாலி லாலி ஆராரோ’

ஆறுபடை மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'லாலி லாலி ஆராரோ'. இதில் பெற்றோர் பிள்ளைகள் மீது வைத்துள்ள பாசத்தின் மேன்மையை எடுத்துக் கூறும் கதையைச் சொல்லப் போகிறார்களாம். "அம்மாதான் உலகம் என்று வாழும் நாயகன் லாலி. தன் மகனை விட உலகத்தில் சிறந்தது எதுவும் இல்லை என்று நினைக்கிறாள் அவனது தாய். இவர்களுக்கு இடையில் காதலியாக, மதுரா உள்ளே வர, அதை அந்தக் குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது என்பது கவனிக்கத்தக்க அம்சம்.

"இதேபோல் தன் மகள்தான் தனது ஆதாரம் என்று வாழும் ஒரு தந்தை. அவரைத் தவிர உலகத்தில் உயர்ந்தது எதுவும் இல்லை என்று கருதும் மகள். இவர்களுக்கு இடையே காதலனாக லாலி உள்ளே வர அதை எப்படி அந்தக் குடும்பம் எதிர்கொள்கிறது என்பது தான் இந்தப் படத்தின் கதை. "இதை குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, காதல் என அனைத்து அம்சங்களும் கொண்ட, குடும்பத்துடன் பார்க்கும் திரைப்படமாக உருவாக்கி உள்ளோம்," என்கிறார் இயக்குநர் லிங்கன் ராஜாளி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!