நல்ல பெயர் எடுத்த நாயகி

'கபாலி'யில் நடித்த பிறகு தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி விட்டார் நடிகை தன்‌ஷிகா. அதற் காக, அவர் அதிகம் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. வழக்கம் போல், புதுமுக நடி கைக்கே உரிய பணிவுடன் அவர் வலம் வருவதுதான் சிறப்பு. இதற் காக தன்‌ஷிகாவைப் பாராட்டாத வர்களே இல்லை. அண்மையில், ஆவணப்படம் ஒன் றில் நடித்தவர், அதற்கான சம்பளத்தை வாங்க மறுத்துவிட்டார் என்ற தகவல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. அந்த ஆவணப் படத்தின் பெயர் 'சினம்'. 'மாவீரன் திலீபன்' என்ற படத்தை இயக்கிய ஆனந்த மூர்த்தி தான் இதையும் இயக்கியுள்ளார்.

அனைத்துலக அளவில் பல விருதுகளை வென்ற 'மாவீரன் திலீபன்' தமிழ்நாட்டில் மட்டும் வெளிவரவில்லை. அதற்காக ஆ னந்த மூர்த்தியும் துவண்டுபோய் தன் பயணத்தை நிறுத்திவிடவில்லை. அவர் தற்போது 'சினம்' ஆவணப் படத்துடன் ரசிகர்களின் மனதை மீண்டும் தட்டி உள்ளார். இந்த ஆவணப் படத்தின் தயாரிப் பாளரும் அவர்தான். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இப்படம் மும்பையில் வசிக்கும் ஒரு பாலியல் தொழிலாளி பற்றிய கதை. இதில் பாலியல் தொழிலாளியாக தன்‌ஷிகா நடித்து இருக்கிறார். இந்தி நடிகை பட்டியாபக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத் தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!