எதையும் சமாளிக்கத் தயார் - வரலட்சுமி

நடிகை பாவனாவுக்கு பாலியல் ரீதியில் தொல்லை ஏற்பட்டதும் பொங்கியெழுந்த வரலட்சுமி, அதன் பிறகு புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி பெண்களுக்காக குரல் கொடுக்கத் துவங்கிவிட்டார். விஷாலுடனான காதல், திருமணம், எதிர்காலத் திட்டங்கள் குறித்து அண்மைய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார் வரலட்சுமி. தனக்கு அரசியல் ஆர்வம் உள்ளதா? என்பது குறித்தும் பேசியுள்ளார்.

“அதிகாரத்துக்கு ஆசைப்பட்டோ, புகழை எதிர்பார்த்தோ நான் புதிய இயக்கத்தைத் தொடங்கவில்லை. அண்மைக்காலமாக பெண்க ளுக்கு எதிரான வன்கொடுமைகள் மிக அதிக அளவில் அரங்கேறி வருகின்றன. அந்தக் கவலையே புதிய அமைப்புக்கு வித்திட்டது,” என்கிறார் வரலட்சுமி.

மூன்று வயது பெண் குழந்தை தொடங்கி மூதாட்டி வரை பாலியல் வன்முறையை எதிர் கொள்வதாக வெளிவரும் செய்திகளைக் கேள்விப்படும்போது தன் மனம் மிகவும் சங்கடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். “பெண்கள் தங்களை இதுபோன்ற வன் கொடுமைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நேரம் இது. என்னால் முடிந்ததை நான் செய்ய இருக்கிறேன்.