விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர நயன்தாராவுக்கு மீண்டும் வாய்ப்பு

நயன்தாராவும் விஜய் சேதுபதியும் தனித்தனியே நடிக்கும் படங்களே நல்ல வசூலைக் கொடுக்கின்றன. இருவரும் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும்? அத்தகைய முயற்சியாகவே 'நானும் ரவுடிதான்' படம் உருவானது. இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப்போவதாகக் கூறப்படுகிறது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கும் 'சீதக்காதி' என்ற படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்திற்கான பூசை அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக யாரும் நடிக்கவில்லை என்பது படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்த தகவல். இந்நிலையில், கதைப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரம் இருப்ப தாகக் கூறப்படுகிறது. அந்த வேடத் தில் நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ள தாகவும் தகவல் வெளியானது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!