ஜெயம் ரவியைப் பாராட்டும் நிவேதா பெத்துராஜ்

நடிகர் ஜெயம் ரவியை புகழ்ந்து தள்ளுகிறார் இளம் நாயகி நிவேதா பெத்துராஜ். இருவரும் ‘டிக் டிக் டிக்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமான நிவேதா, பிறகு உதயநிதியுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் மதுரைப் பெண்ணாக நடித்துள்ளார். இதையடுத்து ‘டிக் டிக் டிக்’ படத்தில் ரவியுடன் ஜோடி சேர வாய்ப்புக் கிடைத் தது. இது விண்வெளியில் நடைபெறும் கதையாம். “ஜெயம் ரவி போன்ற பெரிய நடிகருடன் இணைந்து நடிக்க வாய்ப்புக் கிடைத்தபோது உற்சாகமாக உணர்ந்தேன். அதேசமயம் அவர் பெரிய நடிகர் என்பதால் பயமாக இருந்தது. இதனால் முதல்நாள் படப்பிடிப்புக்குப் பயந்து கொண்டே சென்றேன். நான் செய்த தவறுகளால் ஒரே காட்சியைப் பலமுறை படமாக்க நேர்ந்தது. அதை ஜெயம் ரவி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எந்த மாதிரி நடிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்,” என்கிறார் நிவேதா. ஜெயம் ரவி துளிகூட பந்தா இல்லாதவர் என்று பாராட்டும் நிவேதா, ரவியின் நல்ல குணம், தமக்கு அவர் மீது இருந்த மரியாதையைப் பல மடங்கு உயர்த்திவிட்டதாகவும் சொல்கிறார்.