எழுத்தாளர் வேடத்தில் சாந்தினி

திறமையான நடிகை என்றாலும் சாந்தினிக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அண்மையில் 'கடுகு' படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். தற்போது தமிழில் மூன்று படங்களில் நடித்து வருகிறாராம். அவற்றுள் ஒரு படத்தில் சாந்தினிக்கு எழுத்தாளர் வேடம் அமைந்துள்ளது. அப்படத்தின் பெயர் 'ராஜா ரங்குஸ்கி'. தரணிதரன் தனது பர்மா பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்குகிறார். "'ரங்குஸ்கி' என்பது பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் புனை பெயர். இந்தப் படத்தில் நான் தைரியமான எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது நகர்ப்புறத்துப் பெண் வேடம். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. இதில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. "இப்படத்தில் ராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ‌ஷிரிஷ். இவர் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு பக்கபலமாக இருக்கிறார். மேலும், படத் தயாரிப்பிலும் பல விதங்களில் தோள் கொடுக்கிறார். 'ராஜா ரங்குஸ்கி' அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்," என்கிறார் சாந்தினி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!