‘கருத்து வேறுபாடுகள் இல்லை’

காதலித்து மணம் புரிந்த நட்சத்திர தம்பதிகளான பிரசன்னா, சினேகா இடையே அண்மைக்காலமாகக் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள் ளதாக ஒரு தகவல் வெளியாகி யுள்ளது. இது அவர்களது நட்பு, உறவு வட்டாரங்களைக் கவலைப்படவைத்த நிலை யில், அத்தகவல் வெறும் வதந்தி எனக் கூறியுள் ளார் பிரசன்னா. ஊ ட க ங் க ளி ல் வெளியான இந்தச் செய்தியைப் படித்து விட்டு, இருவரும் வாய் விட்டுச் சிரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இருவரது நலம் விரும்பிகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ள னர். “நானும் சினேகாவும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள்.

அதிலும் காதலித்து மணம் புரிந்தவர்கள். இருவரும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு காதலித்தோம். சொந்தப் படம் எடுக்கும் விஷயத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. “சொந்தப்படம் எடுக்கவேண்டும் எனும் விருப்பம் இருவருக்குமே உள்ளது. ஆனால் உடனடியாக அதை செயல்படுத்தக்கூடிய சூழ் நிலை இல்லை. இருவருமே படங்கள், விளம்பரங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். அதனால் படம் தயாரிக்கும் நிலையில் இல்லை. “சினேகாவைப் பொறுத்தவரையில் குடும்பப் பொறுப்புகள் அவருக்கு அனைத்தையும் விட முக்கியம். எங்கள் மகன் விஹானையும் கவ னித்துக்கொண்டே அவர் படங்களில் நடித்தும் வருகிறார்,” என்கிறார் பிரசன்னா.