ராஜ்கிரண்: குழந்தையாக நினைத்து படமாக்கினார்

வயதான பின்பும், மீண்டும் கதா நாயகன் வேடத்தில், ‘பவர் பாண்டி’ படம் மூலம் திரையுலகில் மறு பிரவேசம் செய்திருக்கிறார் ராஜ்கிரண். 27 வருடங்களுக்குப் பிறகு தான் ஒரு கதாநாயகனாக நடித்ததற்கு, தனுஷ் தன் மேல் வைத்திருக்கும் பாசமும் அன் பும்தான் காரணம் என்கிறார் ராஜ்கிரண். தனுஷ் ஒரு புது இயக்குநர். அவரது இயக்கத்தில் நடித்தது எப்படி? “தனுஷை அவரது நான்கு வயதிலேயே எனக்குத் தெரி யும். ‘வேங்கை’ படத்தில் நான் அவருடன் இணைந்து நடித்தி ருக்கிறேன். “அவர் இன்று அனைவரும் விரும்பும் இயக்குநராகி இருப்பது மகிழ்ச்சியான விஷயம். “தனுஷ், உலகமே போற்றும் ரஜினியின் மருமகன். இந்திப் படங்களிலும் ஹாலிவுட் படங்க ளிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர். தனுஷ் நினைத்திருந்தால் ரஜி னியை வைத்தே ஒரு படத்தை இயக்கி இருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. என்னைத்தான் இப்படத்திற்கு நாயகனாக்கினார்.

‘பவர் பாண்டி’ படத்தின் ஒரு காட்சியில் ராஜ்கிரண்.