நகர்வலம்

புதுமுக இயக்குநர் மார்க்ஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'நகர்வலம்'. யூதன் பாலாஜி நாயகனாக நடித்துள்ளார். இவரது ஜோடியாக தீக்‌ஷிதா மாணிக்கம் அறிமுகமாகிறார். மேலும் யோகி பாபு, பால சரவணன், நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடராஜன் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமிழ்த் தென்றல் என்பவர் இசையமைத்துள்ளார். "சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இன்று குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. பொது மக்கள் தனியாரிடம் இருந்து லாரியில் தண்ணீரை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இப்படி பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய அங்கமாகிவிட்ட தண்ணீர் லாரியின் ஓட்டுநராக இருக்கும் நாயகனுக்கு ஏற்படும் அனுபவங்களே இப்படம். "தண்ணீர் லாரியுடன் சம்பந்தப்பட்ட அரசியலுக்குள் நாயகன் வலுக்கட்டாயமாக இழுக்கப்படுகிறான். இந்நிலையில் அவனுக்கு காதலும் மலர்கிறது. இரண்டிலும் அவன் வெற்றி பெற்றானா என்பதை சுவாரசியமாக சொல்லப் போகிறோம்," என்கிறார் இயக்குநர் மார்க்ஸ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!