‘4 காதலிகள் வேண்டாம்’

திரைப்படங்களில் ஒரு நாயகனுக்கு 4 காதலிகள் இருப்பது போல் சித்திரிக்க வேண்டாம் என நடிகை ஜோதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் நடித்துள்ள ‘மகளிர் மட்டும்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், திரைப்படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் தவிர்க்கப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். ஜோதிகா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மகளிர் மட்டும்’. ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மாவின் கைவண்ணத்தில் உருவாகி உள்ளது இந்தப் படம். நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா தனது 2டி எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.