ஐஸ்வர்யா விரும்பும் வேடம்

கோடம்பாக்கத்தில் இப்போது திறமைசாலி களுக்கு தன்னால் மதிப்பு கிடைக்கிறது. என் திறமையை அங்கீகரியுங்கள் என்று யாரிடமும் மன்றாட வேண்டிய அவசியம் நடிகர் நடிகைகளுக்கு இப்போது ஏற்படு வது இல்லை. இந்த வரிகளுக்கு நம் கண் முன்னே நல்ல உதாரணமாகக் காட்சி தருகிறார் இளம் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். 'காக்கா முட்டை'யில் நடித்ததன் மூலம் தன் நடிப்புத் திறமையை ஒட்டுமொத்த கோடம்பாக்கத்துக்கும் வெளிச் சம் போட்டுக் காட்டிய ஐஸ்வர்யாவுக்கு ரஜினி முதற்கொண்டு பல பெரிய தலைகளும் பாராட்டு தெரி வித்தது நாம் அறிந்த சங்கதிதான். டெல்லி விமான நிலை யத்தில் எதேச் சையாக இவரைச் சந்தித்த ரஜினி, "உங்களுடன் ஒரு படம் எடுத்துக்கொள் ளட்டுமா?" என்று விளையாட்டாகக் கேட்டு, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்ததாகத் தகவல். போகட்டும், நடப்பு விஷயத்துக்கு வரு வோம். ஐஸ்வர்யா வின் நீண்ட நாள் கனவு ஒன்று நன வாகி இருக்கிறது. வேறொன்றும் இல்லை, ரஜினியின் மருமகன் தனு‌ஷு டன் ஜோடி சேர்ந்தி ருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!