வெயில் தாங்காத சமந்தா; ரத்தான படப்பிடிப்பு

நாக சைதன்யாவுடன் திருமணம் முடிவான நிலையிலும் புதிய படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார் சமந்தா. 6 படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள அவருக்கு அவற் றில் நடித்து முடிப்பதற்கே இந்த ஆண்டு முழுவதும் தேவைப்படும். இதற்கிடையில் திருமணத் திற்கும் தயாராக வேண்டும். ஆனாலும் இடைவிடாமல் படப் பிடிப்பில் பங்கேற்று வருகிறார் சமந்தா. இந்நிலையில், ஆந்திராவின் ராஜமுந்திரி அருகே கொனசீமா வில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் நாயகன் ராம் சரணுடன் நடித்துக் கொண்டிருந்தார் சமந்தா.

அப்போது கடுமையான வெயி லால் படக்குழுவினர் அவதிக்கு உள்ளானதால், திடீரென்று படப் பிடிப்பு நிறுத்தப்பட்டு அனை வரும் ஊர் திரும் பினர். இதுபற்றி விசாரித்தபோது, "படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் தினமும் விசிறிகள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்ற தால் படப்பிடிப்பு நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. “அதனால் சிறிது இடை வெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு தொடரும்,” என்று கூறப்பட்டது.