வினுசக்கரவர்த்தி உடலுக்கு தமிழ்த் திரையுலகம் அஞ்சலி

உடல் நலக்குறைவு காரண மாக கடந்த ஓர் ஆண்டாக சிகிச்சை பெற்று வந்த குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலை யாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் நடித்தவர் வினுசக்கரவர்த்தி. அவருக்கு கர்ணப்பூ என்ற மனைவியும் சரவணன் என்ற மகனும் சண்முகப்பிரியா என்ற மகளும் உள்ளனர். வினுசக்கரவர்த்தி மரணம் பற்றிய தகவல் அறிந்ததும் நடிகை, நடிகர்கள் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து உள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறைந்த வினுசக்ரவர்த்தி யின் உடல் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!