மே மாதம் வெளி வருகிறது பலூன்

பலூன் இரண்டு கால கட்டங்களில் நடக்கிற கதை. படத்தில் 15 நிமிடம் பழைய கால கட்ட கதை சொல்லப்படுகிறது. இதில் ஜெய் பலூன் வியாபாரியாக நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ஜனனி அய்யர் நடித்திருக்கிறார். நிகழ்கால கதையில் ஜெய் ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். இது ஒரு திகில் கதை. பிளாஷ்பேக் கதையையும் இப்போதைய கதையையும் இணைப்பது ஒரு பலூன்தான். எனவே பலூன் படத்தின் குறியீடாக கடைசி வரை வரும். யோகிபாபு பெரும்பாலான காட்சிகளில் ஜெய்யுடன் வருகிறார். நகைச்சுவை மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். 'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஜோடியாக நடித்த ஜெய்=அஞ்சலி 'கெமிஸ்ட்ரி' பரவலாக பேசப்பட்டது. மீண்டும் இருவரும் தற்பொழுது இணைந்திருக்கின்றனர்.

70 எம் எம் நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார், பார்மர்ஸ் மாஸ்டர் பிளான் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் இந்தப் 'பலூன்' படத்தை சினிஷ் இயக்கி இருக்கிறார். டோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ராஜ்தருண் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். 10 நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றும் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள ராஜ்தருண் படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கின்றார். 'பலூன்' திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் மே மாதம் வெளிவரவுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!