தமிழுடன் இணைந்து நடிக்கிறார் கயல் ஆனந்தி

அறிமுக நாயகன் தமிழ், ‘கயல்’ ஆனந்தி ஜோடி சேர்ந்துள்ள படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’. இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பாலசரவணன், லிவிங் ஸ்டன், ரேகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ், தளபதி தினேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கு கிறார் ஜெகன்நாத். இவர் ஏற்கெனவே ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இதென்ன இப்படி ஒரு வித்தியாசமான தலைப்பு? என்று கேட்டால், மென்மையாகச் சிரிக்கிறார் ஜெகன்நாத்.

“ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கி றார்களோ இல்லையோ, அவர்கள் மனதில் படத் தலைப்பு நச்சென்று உட்கார வேண்டும். அத்தலைப்பு குறித்து ஏதேனும் விவாதம் நடக்க வேண்டும். இப்போது பாருங்கள், இந்த தலைப்பு குறித்து எதிர்மறை கருத்துக் கள் வரத் தொடங்கி உள்ளன. “என்னைப் பொறுத்தவரை ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த தகவல்கள் பரவ லாகச் சென்றடைய வேண்டும். அதைத் தான் இப்போது செய்துள்ளேன். சரி, இப்போது வைத்துள்ள தலைப்புக் கான விளக்கம்?

“எல்லோரும் வாழ்க்கையில் ஒரு முறை யாவது நமது காலணியைத் தொலைத்தி ருப்போம். அதற்காக வருத்தப்பட்டும் இருப்போம். இந்தத் தலைப்பை உச்சரிப்பதன் மூலம் ஒவ்வொருவருமே தங்கள் வாழ்க் கையில் கிடைத்த அத்தகைய அனுபவத்தை மீண்டும் அசைபோட முடிகிறது. பழைய செருப்பு தானே என்று கடந்து போக விடாமல் ஏதோ ஒன்று உங்களது மனதை இழுத்துப் பிடிக்கும். அதைத் தான் இந்தப் படம் அலசப் போகிறது,” என்கிறார் ஜெகன்நாத்.